[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் வெற்றி உறுதி

aiadmk-dmk-candidates-elected-unopposed-to-rajya-sabha

தமிழகத்தில் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகளின் மனுக்கள் நிராகரிப்பட்டதால், அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், திமுக வேட்பாளர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல், திமுக சார்பில், டி.கே.எஸ் இளங்கோவனும், ஆர்.எஸ்.பாரதியும் மனுத் தாக்கல் செய்தனர். சுயேச்சையாக மேட்டூர் கே.பத்மராஜன், பெரம்பலூர் மங்கூன் நடராஜன், சென்னை விருகம்பாக்கம் கே.குமார், சாலிகிராமம் அக்னி ஸ்ரீராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீன் வேட்பு மனுக்களை இன்று பரிசீலனை செய்தார். மனுவை ஏற்க, போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும், சுயேட்சைகளுக்கு யாரும் முன்மொழியாததால் , ‌அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற வரும் 3-ஆம் தேதியே கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close