[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இன்றும், நாளையும் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்..!

free-metro-service-in-chennai-tomorrow

சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இன்றும், நாளையும் (11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்‌களிலிருந்து இலவசமாக பயணம் செய்யலாம். முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக இலவசமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்ட போது இரண்டு லட்சம் மக்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வண்ணாரப்பேட்டை  டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close