[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

பிரதமர் மோடியின் திருக்குறள் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதில்

p-chidambaram-reply-to-pm-modi

வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு, எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் என்ற திருக்குறளை பதிலாக அளித்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி, வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்ற திருக்குறளை கூறி கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறளை தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் அன்றே இதை சொன்னாரோ? எனவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திருப்பூர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் கட்சி பல ஊழல்களை செய்துள்ளது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அத்துடன் முந்தைய காங்கிரஸ் அரசு நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close