[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மாயமான இளைஞரை சுற்றுலா வந்த இடத்தில் கண்டுபிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் !

the-missing-youth-was-found-in-kanyakumari-after-4-months

ஈரோட்டில் மாயமான வாலிபர் ஒருவர் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த போது குடும்ப நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியரான செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் பூபதிராஜா (29) டிப்ளமோ இன்ஜினியரான இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான பவானிசாகரில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். 

Related image

இந்நிலையில் தந்தையின் மரணம் பூபதிராஜாவை மனரீதியாக பாதித்தது. இதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Image result for missing man

இந்நிலையில் பூபதிராஜாவின் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.கன்னியாகுமரியில் உள்ள ஏடிஎம் ஓன்றில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் பூபதிராஜாவை போல் இருக்கிறது என்று பூபதி என்று அழைத்துள்ளனர். அப்போது பூபதிராஜா திரும்பி நின்று கூப்பிட்டவர்களை பார்த்துள்ளார். இது பூபதிராஜாதான் என்று உறுதிபடுத்திய அவர்கள் பூபதிராஜாவை காரில் ஏற்றிக்கொண்டு நேராக கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவல் கொடுத்தனர். 

இதனையடுத்து போலீசாரும் பூபதியின் குடும்ப உறுப்பினர்களும் அவரிடம் பேசும் போது கஜினி படத்தில் சூர்யாவுக்கு பழைய சம்பவங்கள் மறந்ததுபோல அனைத்தும் மறந்து போய் மாற்றி மாற்றி பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஈரோட்டில் உள்ள பூபதிராஜா வின் குடும்பத்தினருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன குடும்ப இளைஞரை சந்தித்து காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close