தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை இன்று கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே இரண்டு முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 30 நிறுவனங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!
“காஷ்மீர் போராட்டம்; காஷ்மீரிகளுக்கு எதிரானது அல்ல” - மோடி விளக்கம்
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்
“மீண்டும் சொல்கிறேன்; பிரதமர் வேட்பாளர் ராகுல்தான்” - ஸ்டாலின் திட்டவட்டம்
2 ரூபாய் கூடுதலாக வசூலித்த நிறுவனத்துக்கு ரூ68 ஆயிரம் அபராதம்...!