[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

avaniyapuram-jallikattu-festival-is-started-today-at-8-am

புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், 691 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்களும்பங்கேற்கின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்‌பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளனர். 

வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close