[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு எஸ்டேட் சர்ச்சை

again-kodanadu-controversy-in-tn

மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள கோடநாடு எஸ்டேட் சர்ச்சை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளனர்.

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பகுதியில் நிகழ்ந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் தொடர்பாக தெஹல்கா இணையதள இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களா காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்ட போது, அவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாகவும், பங்களாவில் இருந்த உயர் ரக கடிகாரங்கள் காணாமல் போனதாக கூறிய போதே, காவல்துறை எதையோ மறைக்கிறது என்ற சந்தேகம் எழுந்ததாக கூறியுள்ளார். ஓம்பகதூர் மரணத்தை அடுத்து நிகழ்ந்த தொடர் மரணங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் பணம் சொத்து ஆகியவற்றை கைப்பற்றவே நடந்துள்ளன என்ற சந்தேகத்தை எழுப்புவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் அதன்பிறகும் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் மர்மம் நிறைந்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமியை குற்றம்சாட்டுவதாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் மாத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால்தான், மர்மம் விலகி முழு உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறியுள்ள ஸ்டாலின், இல்லாவிட்டால் திமுக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் கோடநாடு கொலை, கொள்ளை  தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதனிடையே, கொடநாடு தொடர்பாக நேற்று வெளியான வீடியோ உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வீடியோ விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று விரைவில் கண்டறியப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்றே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

முன்னதாக கோடநாடு பங்களா விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பின்னர், கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் தொடர்புடைய சயன், பேட்டியளித்தார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், கோடநாடு பங்களாவில் இருந்து சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகத் தெரிவித்தார். அந்த ஆவணங்களை எடுத்துவரும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக கனராஜ் கூறியதாக சயன் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close