[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் ! மனிதர்களுக்கு அல்ல ஜல்லிக்கட்டு காளைகளுக்கு

veterinarian-doctor-merrilraj-gives-free-medical-service-for-jallikattu-bullock

ஜல்லிக்கட்டு காளைகள் மீதான ஈர்ப்பின் காரணமாக ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வீடு தேடி சென்று இலவசமாக சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வீரத்திற்கும் பாசத்திற்கும் அடையாளமாக கருதப்படுபவை. அந்த வகையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளைகளை வளர்ப்போருக்கும் உள்ள உறவு பாசத்திற்கு அடையாளம். ஜல்லிக்கட்டு நெருங்கும் நிலையில் ஆண்டுமுழுவதும் காளைகளை  முறையான பராமரிப்பிலும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் வழங்கி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் படுத்தினாலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முழுமையான உடற் தகுதி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். எனவே காளைகளின் உடற்தகுதியில் காளை வளர்ப்பவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்கள். இதற்காக வீடு தேடி சென்று இலவசமாக சிகிச்சையளிக்கிறார் கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்.

ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் அதனை பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிப்பதிலும் காளை வளர்ப்பவர்களுக்கு காத்திற்கும் சவால்கள் சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிகுந்த சிரமங்களை சந்திக்கும் காளை வளர்பவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்தவர்தான் மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவர் கடந்த 7 ஆண்டுகளாக அலங்காநல்லூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியபோது பெரும்பலான ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து ஜல்லிக்கட்டு காளைகளின் குணாதிசியங்கள், செயல்பாடுகள் தன்னை மிகுந்த ஈர்ப்புக்குள்ளாகியதாக கூறுகிறார்.

மருத்துவர் காளைகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பணி நேரங்களில் மட்டுமல்லாமல் பணி நேரம் முடிந்த நேரம், விடுமுறை நாட்களில் வீடு தேடிச் சென்று தன்னால் இயன்ற மருத்துவ ஆலோசனைகளையும், உடல் உள் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சையும் வழங்கி வருவதாக கூறுகிறார். நாட்டு மாடுகளின் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மேய்ச்சல் பகுதிகளில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை உண்பதால் ஏற்படும் கட்டிகள், ரத்த கட்டு, புற்றுநோய், கல்லீரல் கோளாறு, சிறுநீரக கோளாறு, ரத்த கட்டு, எலும்பு முறிவு, உள்ளிட்ட காளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் 5 நிமிடங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறிந்து அதனை மருந்துகள் மூலமாகவும் அறுவை சிகிச்சை மூலமாகவும் குணபடுத்துகிறார். காளை வளர்ப்பவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கும் வகையில் இந்த இலவச சேவையில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் மெரில்ராஜ் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.கிராம மக்கள் காளைகள் மீது வைத்துள்ள பாசமும், காளைகள் காளை வளர்ப்பவர்கள் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் உணர்சிகள் தமக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏறபடுத்தி வரும் நிலையில் பாசம் மிகுந்த காளைகளுக்கு செய்துவரும் இந்த சேவை தமக்கு மிகுந்த மன நிறைவை தருவதாகவும் கூறுகிறார்.

மேலும் காளைகளின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அறிந்து தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சைகளை வழங்கி வருவதால் காளை வளர்ப்பவர்கள் மத்தியில் இவர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த மருத்துவரின் சேவை தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக கூறும் காளை வளர்ப்பவர்கள், மருத்துவமனைக்கு காளைகளை கொண்டு செல்ல வேண்டும் என்றால் வாகனம் தயார் செய்து 10 பேர் உதவியுடன் பல மணி நேரம் காத்திருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவாதாக கூறுகின்றனர்.

மேலும் இவர் செய்யும் ஸ்கேன் செய்ய எடுக்க வேண்டும் என்றால் நாமக்கல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மருத்துவர் மெரில்ராஜின் சேவை தங்களுக்கு மிகுந்த பயனை தருவதாகவும் இந்த சேவை தங்களுக்கு உதவிகரமாக உள்ளதாகவும் கூறி  மருத்துவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

தகவல்கள் : G.கணேஷ்குமார், செய்தியாளர்-மதுரை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close