[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

மெரினாவில் உரிமம் இல்லாத கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

hc-ordered-to-vacate-marina-shops

’’சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2 ஆயிரம் கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக, உரிமத்துடன் குறைவான எண்ணிக்கையில் கடைகளை அனுமதிக்க வேண்டும்’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து தரும்படி மீனவர்கள் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மெரினா கடற்கரை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநக ராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தைக்கு பின் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மெரினாவில் கடை நடத்துபவர்கள் சங்கம் சார்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ’மெரினாவை ஒழுங்கு படுத்துகிறோம், தூய்மை படுத்துகிறோம் என்றும் எங்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர். 

இதையடுத்து, மெரினா கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதிகள் கூறினர். விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர். 

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2,000 கடைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக உரிமத்துடன் குறைவான எண்ணிக்கையில் கடைகளை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், மெரினாவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன் றம் விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

முன்னதாக மாநகராட்சி தரப்பில், மெரினா கடற்கரையில் உள்ள மீன்கடைகளை மாற்றுவது தொடர்பாக மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் மீன் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close