[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு தயாராகும் மதுரை : 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு

palamedu-jallikattu-expected-10-lakhs-veiwers-will-come-in-this-year

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 16ஆம் தேதி நடைபெறும் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி பந்தக்கால் நடப்பட்டு துவங்கிய இந்த பணிகள் 200 தொழிலாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. வாடிவாசல் அமைப்பது, பார்வையாளர்களுக்கான இருக்கை கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடங்கள் அமைப்பது, முன்பதிவு மையம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Read Also -> அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ?

கடந்த ஆண்டு 7 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையில் இந்த ஆண்டு 10 லட்சம் பேர் வருவார்கள் என்ற எதிர்பார்பில் அதற்கான இருக்கைகள், குடிநீர், கழிவரை உள்ளிட்ட வசதிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் முன்பதிவு செய்யப்பட்டு போதிய நேரமின்மையால் பெரும்பாலான காளைகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமடைவதால் இந்த ஆண்டு 650 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

Read Also -> 20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்

Related image

மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்படும் காளைகளுக்கான தண்ணீர் மாட்டுத்தீவனம் உள்ளிட்ட வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்பதிவு காலதாமதம் இல்லாமல் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த ஜல்லிக்கட்டு விழா என்பது ஒரு திருவிழாவாக மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் சமத்துவத்துடன் கொண்டாடும் ஒரு திருவிழாவாகவே ஆண்டான்டு காலமாக கொண்டாடி வருவதாக கூறுகின்றனர். மேலும் கிராம மக்களின் ஒற்றுமை, சகோதரத்துவம் அதிகரிக்க இந்த திருவிழா ஒரு பாலமாக அமைந்து உள்ளதாகவும் விழா கமிட்டியினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close