[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்

cm-edappadi-k-palaniswami-speech-about-m-karunanidhi-renown-in-assembly

5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்.

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேசிய போது, “இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர், 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் ஆனார். எழுத்து,இலக்கியம்,திரைத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர், பன்முக தன்மை கொண்டவர். கருணாநிதியின் பன்முகத்தன்மையால் சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலமாக ஏற்படுத்தியவர். பராசக்தி படம் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தினார். தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது. ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர். சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த கருணாநிதியை அதிமுகவும் சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது, தேவையெனில் எதிர்த்து உள்ளது.  தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று கலைஞர் மு.கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம் சூட்டினார்.மேலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதி என்று அழைக்காமல், அவர் பெயர் வரும் இடத்தில் எல்லாம் திரு.கலைஞர் அவர்கள் என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close