[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

டீக்கடை கடன் தள்ளுபடி ! அசத்திய உரிமையாளர்

tea-shop-owner-announces-tea-accounts-waiver-of-up-to-15000

புதுக்கோட்டை அருகே டீக்கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்வதாக அறிவித்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் பாதித்து ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்புநிலைக்கு திரும்புகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலதரப்பினரும் உதவி செய்தனர். வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் கூட உதவிக்கரம் நீட்டினர். சிறுவர்கள் பலரும் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை கஜா நிவாரணத்துக்கு அனுப்பி நெகிழச்செய்தனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு டீக்க்கடைக்காரர் நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாத நிலையில், புதுக்கோட்டை அருகே டீக்கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்வதாக அறிவித்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார். திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் சிறிய டீக்கடை ஒன்றை நடத்திவருகிறார். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் பலரும் கணக்கு வைத்து டீ குடித்துவிட்டு பின்னர் பணம் வழங்குவது வழக்கம். 

அந்த வகையில், இவரது கடையில் 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வாடிக்கையாளர்கள் கடன் வைத்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களால் கடனை திருப்பித்தர முடியாது என்பதால் 15 ஆயிரம் ரூபாய் கடனையும் சிவக்குமார் தள்ளுபடி செய்துள்ளார். கஜா புயலால் தானே பாதிக்கப்பட்டிருந்தாலும், கடையில் பாக்கி வைத்திருந்தவர்கள் அதனை திரும்ப செலுத்த தேவையில்லை என டீக்கடைக்கடை நடத்தும் சிவக்குமார் கூறியிருப்பது விவசாயிகளையும், வாடிக்கையாளர்களையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close