[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

உயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..!

grand-mother-saved-her-grand-daughter-in-chennai

பேத்தியை காப்பாற்றிய பாட்டி ரயில் மோதி உயிரிழந்தச் சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அமுதா. தனது பேத்தியுடன் சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். தண்டவாளங்களை கடக்காமல் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என நாள்தோறும் ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனாலும் விபரீதத்தை உணராத இருவரும் ரயில் தண்டவாளத்தின் மேல் நடந்து சென்றதாக தெரிகிறது.

(சம்பவத்தை நேரில் பார்த்தவர்)

கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் ஒன்று நெருங்கி வந்துவிட்டதைக் கண்டு அமுதா அதிர்ச்சியடைந்தார். இதனால் நொடிப் பொழுதில் சுதாரித்து  பேத்தி தர்ஷினியை தூக்கி வீசினார். ஆனால் அமுதாவே, வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தர்ஷினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்தவர், கீழ்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மோகனவள்ளியின் தாயார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close