[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

ஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்

chennai-chokhi-dhani-staff-hit-kids-threatened-to-make-them-drink-camel-s-urine-say-parents

சென்னையை அருகே உள்ள திருமழிசையில் ஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு பள்ளிக்குழந்தைகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். 

சென்னையை அருகே உள்ள திருமழிசையில் சென்னை தனியார் பள்ளி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஒருநாள் சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அந்தச் சுற்றுலாப் பயணம் அண்மையில் அரங்கேறியுள்ளது. ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சோகி தானி என்ற ஹோட்டல் ஒன்றிற்கு குழந்தைகளை பள்ளி நிர்வாகம் அழைத்துச்சென்றுள்ளது. அந்த ஹோட்டல் ராஜஸ்தானிய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டதாகும். 

22 ஆசிரியர்களின் பார்வையில் மொத்தம் 400 குழந்தைகள் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு சென்றதும் குழந்தைகளை ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில் மதிய நேர உணவு இடைவெளியின் போது குழந்தைகளை, விட்டு ஆசிரியர்கள் தனியாக உணவு உண்ண சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சோகி தானி ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துள்ளனர்.

அத்துடன் ஒரு தண்ணீர் கேனில் ஒட்டகத்தின் கோமியத்தை கொண்டு வந்து அதைக்குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். கோமியத்தை குடிக்க சில குழந்தைகள் மறுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த கழிவறையில் இருந்து இரும்பு பைப் ஒன்றை கொண்டு வந்து குழந்தைகளை அந்த இருவரும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் அலறியுள்ளனர். இதையடுத்து அந்த அறையில் இருந்து சிறிய நுழைவு ஒன்றில் வழியாக குழந்தைகள் புகுந்து ஓடியுள்ளன. பின்னர் தகவலறிந்து குழந்தைகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், சோகி தானி ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளதால், அதுதொடர்பாகவும் விசாரிக்கபட்டு வருகிறது.

(தகவல்கள் : தி நியூஸ் மினிட்)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close