[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

 “வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்

ltte-leader-velupillai-prabhakaran-birthday

தமிழீழ தேசியத் தலைவராக போற்றப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள் இன்று.

Related image

சிறு வயதிலேயே போர்க்குணத்துடன் இருந்த பிரபாகரன் தனது 21 வயதில் ஆயுதப்பாதையில் போர்க்களத்திற்குச் சென்றார். தமிழர் மனங்களில் நிறைந்திருக்கும் பிரபாகரனை ஈழத்தமிழர்கள் போற்ற காரணம் என்ன என்பது அவரது வாழ்வை ஆய்ந்து பார்த்தால்தான் புலப்படும். தமது 13 ஆவது வயதில் தந்தை வேலுப்பிள்ளையுடன் பிரபாகரன் நடந்து செல்லும்போது, முதியவர் ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை பார்த்த அவர், ஏன் இப்படி தாக்குகிறார்கள் என தந்தை வேலுப்பிள்ளையிடம் கோபமாக கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரனின் தந்தை நம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என விரக்தியில் தெரிவித்துள்ளார்.

Related image

சற்று நேரம் மெளனம் காத்த பிரபாகரன், பிறந்த எம் தமிழ் இனத்தை காரணம் காட்டி தாக்குபவர்களை, தாம் திருப்பி தாக்குவோம் எனக்கூறியுள்ளார். அப்போது அதனை பிரபாகரனின் தந்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தந்தையிடம் சொன்ன வார்த்தையை 21 வயதில் மெய்ப்பித்துக்காட்டினார் பிரபாகரன்.ஆம், இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 1974ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இனவெறி காரணமாக தமிழர்களை காரணமின்றி சுட்டு வீழ்த்தியது இலங்கை அரசு. அதற்கு உறுதுணையாக இருந்த மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக்கொன்று தமது சுதந்திர வேட்கைப்போரை தொடங்கினார் பிரபாகரன். 

Image result for வேலுப்பிள்ளை பிரபாகரன்

அப்போது அவர் எமது மக்களின் விடுதலைக்காக போராட செல்கிறேன். இனிமேல், வீட்டிற்கு திரும்பிவர மாட்டேன் என தமது பாதையை வகுத்துக்கொண்டார் பிரபாகரன். ‘வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்’ என்பது அவரது வாழ்க்கை தத்துவமாகவும் இருந்துள்ளது. போராட்டங்கள் நிறைந்த வாழ்வை அவர் தேர்வு செய்திருந்தாலும், தன்னல மறுப்பு, அர்ப்பணிப்பு, தனி மனித வாழ்வில் தூய்மை, போர்க்குணம் ஆகியவற்றில் இருந்து சற்றும் விலகாமல் பயணித்தார். சில தவறான முடிவுகள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், அவரது கொள்கைகளால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் மனங்களில் தினம் தினம் பிறக்கிறார் பிரபாகரன்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close