[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கஜா புயல் நிவாரண நிதி : 22ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம்

cm-palanisamy-travel-to-delhi-on-22nd-nov-for-gaja-fund

கஜா புயல் பாதிப்பு அறிக்கையையும் சமர்பிக்கவும், மத்திய அரசின் நிவாரண நிதியை கோரவும் முதலமைச்சர் பழனிசாமி 22ஆம் தேதி டெல்லி செல்கிறார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன. புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் சீரமைக்கப்படும் வரை, மின்கம்பிகளே துணிகளை உலர்த்தும் கொடிகளாக மாறியிருக்கின்றன.

கன மழை புகுந்த வீட்டில், உணவுக்கு உதவும் குடும்ப அட்டைகள் கூட தப்பவில்லை. குடும்ப அட்டை போன்ற முக்கிய ஆவணங்களையும் உலர்த்தும் காட்சி, கன மழையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடுகள் இருந்தன. பல பெட்ரோல் நிலையங்களும் சேதமடைந்திருந்ததால், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசலுக்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு போன்ற காரணங்களால் ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டிருந்ததால், பணமெடுப்பதிலும் சிரமம் இருந்தது உணவு, உடை, இருப்பிடம் என மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இந்த கஜா புயல் புரட்டிப்போட்டிருக்கிறது. திருவாரூரில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காதசூழல் நிலவுகிறது. குடிநீருக்கான ஏற்பாட்டையாவது உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர முதலமைச்சர் பழனிசாமி வரும் 22ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார். கஜா புயலின் சேதம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைக்கவுள்ளார். அத்துடன் கஜா புயல் குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கைகையும் பிரதமரிடம் கொடுத்து, நிவாரண நிதியை அவர் கோர இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close