[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சென்னையிலிருந்து 5 லட்சம் பேர் பயணம் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

deepavali-special-buses-from-koyambedu

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஒருலட்சத்து இருபது ஆயிரம் பேர், பயணித்திருப்பதாகத் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, வேலை, படிப்பு, பிசினஸ் போன்ற பல காரணங்களுக்காக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தங்கியிருக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள், சொந்த ஊர் செல்வது வழக்கம். சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் பயணம் செய்ய ஏதுவாக, இந்த ஆண்டு, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுவதாக கூறினார். மேலும் தீபாவளிக்காக சென்னையில் இருந்து இதுவரை 5 லட்சத்து 16 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த ஆண்டு 2 லட்சத்து 90 ஆயிரத்து 895 பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்தாண்டு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 807 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு 966 லட்சம் ரூபாய் வருவாய் எட்டிய நிலையில் இந்தாண்டு இதுவரை 684 லட்சம் ரூபாய் வருவாய் கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 2 ஆயிரத்து 724 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close