[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

ஜெயக்குமாரை விமர்சித்ததற்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் கைது

criticism-on-minister-jayakumar-youth-arrested

அமைச்சர் ஜெயக்குமாரை சமூகவலைத்தளங்களில் விமர்சித்த இளைஞர், சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த வீரமுத்து என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் வகையில் இருந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் வீரமுத்து சிங்கப்பூரில் வெல்டிங் தொழில் செய்து வந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட முடிவு செய்த வீரமுத்து, நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்திலேயே வீர முத்துவை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிராகஷ் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தான் செய்தது தவறுதான் என வீரமுத்து மன்னிப்பு கோரினார்.

மன்னிப்பை ஏற்றுகொண்ட நீதிபதி செய்த தவறுக்கு ஊடகத்தின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வீரமுத்துவிற்கு ஜாமீன் வழங்கினார். வீரமுத்துவும் ஊடகத்தின் முன்பும் மன்னிப்பு கேட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close