[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

‘யமஹா’தொழிலாளர்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

police-denied-permission-to-yamaha-workers-rally

‘யமஹா’ நிறுவன தொழிலாளாகள், ராயல் என்பீல்டு நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறவிருந்த பேரணிக்கு காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வருகிது ‘யமஹா’ நிறுவனம். இந்நிறுவனத்தில் கிட்டத்திட்ட 750-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்த இரண்டு தொழிலாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் ‘யமஹா’ நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கும் மறுபடி வேலை வழங்க வேண்டும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையை தொழிலாளர்களின் ஆலை உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியது ‘யமஹா’. இந்த வழக்கில், தொழிற்சாலை சுற்றளவில் இருந்து 200 மீட்டர் வரை போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பல தொழிலாளர்கள் செல்போன் டவர்கள் மீது தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பாக 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு ‘ராயல் என்பீல்டு’. இங்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தமாக்ககோரி இங்குள்ள 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆலை நிர்வாகம் இதற்கு முறையாக பதிலளிக்கவில்லை.

‘யமஹா’ நிறுவன தொழிலாளர்கள், ‘ராயல் என்பீல்டு’ நிறுவன தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர்களின் பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்கள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், தொழிலாளர் நலத்துறை வழங்கக் கூடிய அறிவுரைகளை ஆலை நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் நாளை ஒரகடத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்தப் பேரணிக்கு தற்போது காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close