[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

32 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை: மீண்டும் அரியணையில் ஜெயலலிதா

after-32-years-jayalalithaa-the-first-to-retain-power-in-tamil-nadu

தமிழக தேர்தல் வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது அதிமுக. அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

அனைத்துத்தொகுதிகளிலும் ‌இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு இந்த வெற்றியை அதிமுக சாத்தியமாக்கி உள்ளது

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் சில தலைவர்கள் மட்டுமே தொடர் வெற்றிகளைப்பெற்று முதலமைச்சர் நார்காலியை அலங்கரித்து மக்கள் மனதிலும் ஜார்ஜ் கோட்டையிலும் இடம்பிடித்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் 1954ம் ஆண்டு ராஜாஜிக்கு பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் 1957 மற்றும் 1‌962ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்று ஆட்சியை‌ தக்கவைத்துக் கொண்டார்.

1969ம் ஆண்டில் அண்ணாவின் மறைவுக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி 1971ம் ஆண்டு தேர்தலில் வென்று மீண்டும் அரியணையில் அமர்ந்தார்.

1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராக புனித ஜார்ஜ் கோட்டையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர் 1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வென்று ‌ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்ற ஒரே தலைவர் என்ற சாதனையை ‌எம்.ஜி. ஆர். படைத்தார். 1984ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் திமுகவும்,அதிமுகவும் மாறிமாறி ஆட்சியில் அமர்ந்த நிலை, தற்போதைய தேர்தலில் முடிவுக்கு வந்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ‌ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா 6 வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close