[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

“ஆளுநரை குற்றஞ்சாட்டுவது மிகப்பெரிய சதிச்செயல்”- பொன்னார்

union-minister-pon-radhakrishnan-speaks-about-nirmaladevi-issue

நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னையிலிருந்து இன்று காலை புனே செல்ல இருந்த‘நக்கீரன்’ஆசிரியர்  கோபாலை, விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சரிடம் கோபாலின் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''இன்று காலைதான் சென்னை வந்தேன். பிறகு முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டேன். அதனால் ‘நக்கீரன்’ஆசிரியர் கோபாலின் கைது குறித்து எந்த விவரமும் தெரியாது'' எனத் தெரிவித்தார்.

பத்திரிகை சுதந்திரத்தை பாஜக பறிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச திமுகவுக்கு உரிமையும், தகுதியும் இல்லை என்றும் திமுகவுக்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் பாஜக இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன்,“நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும். அந்த அச்சத்தின் காரணமாகவே இங்கு பெரிய சதி நடந்து வருகிறது. ஆளுநரை குற்றம்சாட்டுவது போல் அவரை இணைத்து பேசுவதும்கூட மிகப்பெரிய சதிச்செயல் என்று நான் நினைக்கிறேன்”என அவர் தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close