[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

மலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞரின் கண்ணீர் கோரிக்கை

tn-youth-struggle-for-life-in-malaysia

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற தமிழக இளைஞர், தான் ஏமாற்றப்பட்டதாகவும் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணொளி பதிவின் மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசியாவிற்கு சென்றுள்ளார். டூரிஸ்ட் விசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பி அங்கு நிரந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக தனியார் ஏஜென்ஸி சொன்னதை நம்பி தினேஷ்பாபு ஒரு லட்சம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.

மலேசியா சென்ற அவர்  தற்போது அங்கு சாப்பிடக் கூட வசதி இல்லாமல் இந்தியர்கள் சிலரிடம் தஞ்சமடைந்திருப்பதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் தினேஷ். மலேசியாவில் தவிக்கும் தினேஷ்பாபுவை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close