[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

மேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்

karnataka-report-to-mekedatu-dam-project-details

காவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Read Also -> விமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்

Read Also -> 'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த வாரம் தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், திட்டம் குறித்து மாநிலங்களிடையே விளக்கக் கூட்டத்தை கர்நாடக அரசு விரைவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Also -> மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

அடுத்த இரண்டு வாரங்களில் இதுகுறித்த தெளிவான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close