[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

சமூக வலைத்தளங்கள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

the-chennai-high-court-has-issued-notice-to-social-media

புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை வழங்க மறுப்பது தொடர்பாக விளக்கமளிக்க பேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க  ஆதாரை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களை தடுக்க மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது எனவும், இதுபோன்ற இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இணையதள குற்றங்களில் சமூக வலைத்தளங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அதேசமயம் வேறு வழிகளில் தகவல்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞரான டாக்டர் வி.வெங்கடேசன் ஆஜராகி, சமூக வலைத்தளங்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் போது, காவல்துறை கேட்கும் விவரங்களை சமூக வலைத்தளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது என தெரிவித்தார். அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், வழக்குப் பதிவு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கும் விதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும், சமூக வலைத்தளங்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதற்கு குறைதீர்ப்பாளரை அந்தந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதுபோன்று நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை என்பதையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவந்தார். அதேசமயம், தனிநபர் விவரங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். இதைப்பதிவு செய்த நீதிபதிகள், யுடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களை வழக்கில் சேர்த்தும், நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். 

மேலும் இதுவரை ஏன் குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை; நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஏன் இந்தியாவில் அமைக்கப்படவில்லை, காவல்துறை கேட்கும் விவரங்களை தர ஏன் மறுக்கப்படுகிறது ஆகியவை தொடர்பாகவும் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close