[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

dmk-leader-karunanidhi-die-rajinikanth-visit-gopalapuram-house-and-respect

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுதவிர பல மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதிமுக செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார். 

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள ரஜினிகாந்த், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close