[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

டெல்லியில் இருந்து சென்னை கிளம்பிய திமுக எம்.பி.க்கள்

dmk-mp-s-returning-to-chennai

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு எனவும் அவரது முக்கிய உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில் சவால் உண்டு என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதனையடுத்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை முதலே கருணாநிதியின் உடல்நிலையில் லேசாக பின்னடைவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. நேற்று குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சந்தித்து சென்ற பின்னரும் புகைப்படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை தற்போது புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

அந்த மருத்துவமனை அறிக்கையில்,“கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பதில் சவால் உள்ளது.  அவர் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள திமுக எம்பிக்கள் சென்னை திரும்புகின்றனர். கடைசி விமானத்தில் அவர்கள் சென்னை திரும்புகின்றனர். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் சென்னைக்கு கிளம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close