[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

மதுரை மத்திய சிறையில் இருந்து 16 கைதிகள் விடுவிப்பு

release-of-prisoners-16-today

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை விதியின் கீழ் 16 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் நுாற்றாண்டுவிழாவினை முன்னிட்டு 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசிகளுக்கு நன்னடத்தை விதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கிவிடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து 2 ஆம் கட்டமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக இருந்துவந்த 16 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா். சிறை அதிகாரி மற்றும் நன்னடத்தை அதிகாரிகளின் ஒப்புதலுடன் 16 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை விதியின் கீழ் விடுவிக்கப்பட்டனா். விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரும் மன மகிழ்வுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனா். முதற்கட்டமாக கடந்த 25 ஆம் தேதி மாரியப்பன் என்ற ஆயுள்கைதி விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று 2 ஆம் கட்டமாக 16 பேரும் மொத்தமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 2 ஆம் கட்டமாக 17 ஆயுள் தண்டனை அனுபவித்த வந்த சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close