[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

இப்படியும் ஒரு நேர்மை ! பாராட்டுகளில் திளைக்கும் உதவி பேராசிரியர்

the-professor-who-took-the-money-has-handed-over-10-thousand-rupees-to-the-bank

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்ற உதவி  பேராசிரியர், ஏற்கெனவே இயந்திரத்தில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை வங்கியில் ஒப்படைத்துள்ளார். பேராசிரியரின் இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் வேலன். இவர் மாலை நேரத்தில் திறந்த வெளி உணவகத்தில் பணியாற்றியும் வருகிறார். கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் செந்தில் வேலன் பணம் எடுப்பதற்கு முன் வந்த ஒருவர் அட்டையை நுழைத்து விட்டு பணம் வரவில்லை என்று சென்றுவிட்டார். இந்நிலையில் அதே ஏ.டி.எம். இயந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு செந்தில் வேலன் வியப்படைந்தார். அப்போது ஏ.டி.எம் மையத்தில் பாதுகாவலர் இல்லாததால், தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் முன்னிலையில் வங்கி மேலாளர் ஹரிதரனிடம் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தார்.

இதனைதொடந்து காவல்துறை விசாரணையில், செந்தில் வேலன் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக கூறப்படுகிறது.  10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த செந்தில் வேலனின் செயலை காவல்துறையினர், வங்கி அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close