[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு குறைப்பு

inflow-from-cauvery-decreases

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு 40 ஆயிரம் கன அடியில் இருந்து 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு இடங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் கர்நாடக அணைகள் நிரம்பின. இதன்காரணமாக அங்கிருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு அதிகமான நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டு மேட்டூர் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் மழை அளவு குறையக் குறைய தொடங்கியதால் தமிழகத்துக்கு திறந்துவிடும் நீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது.

அதன்படி நேற்று 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டத் தடை தொடர்ந்து 22-ஆவது நாளாக நீடிக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close