[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

இதைப் படிக்க மறக்காதீங்க... Top Stories 18.07.18

top-stories-of-18072018

“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்  

இதுதொடர்பாக பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன், “சிறப்பான ஆட்டம். இது எங்கள் பந்துவீச்சாளர்களால் சாத்தியமானது. வுட் மற்றும் வில்லி சிறப்பாக விளையாடினர். நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது அதைப்பயன்படுத்திக் கொண்டோம். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்திய அணி 300 அல்லது 320 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். அதை எங்கள் ஸ்பின் பவுலர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில், இந்திய அணி எங்களை தண்டித்தது. ஆனால் அதன்பின்னர் நாங்கள் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இதனால் நாங்கள் ஒரு திறமை வாய்ந்த அணியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 

'சபரிமலையில் ஏன் பெண்களை அனுமதிக்கக் கூடாது?' - உச்சநீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த பெண்களை ஏன் அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்க மறுப்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. பின்னர் பேசிய நீதிபதிகள், இவ்வாறு தான் வழிபட வேண்டும், குறிப்பிட்ட மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர். அப்படி இருக்கும் போது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக அமைந்துவிடாதா? எனவும் கேள்வி எழுப்பினர். இறைவழிபாட்டில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் !  

இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்க ஏற்ற வீரர் யார்? என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் 4வது இடத்தில் விளையாட சரியான வீரர் கிடைக்காததே காரணம் என்று கூறுகின்றனர். இந்நிலையில் ‘தாதா’ என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலியிடம், இந்திய அணியில் 4-வதாக களமிறங்க ஏற்ற வீரர் யார்..? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அவரும் தான் கண்ணை மூடி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி கண்ணை மூடி பார்த்த கங்குலி, “நான் கண்ணை மூடி பார்க்கும் போது, எனக்கு ராகுல் தான் தெரிந்தார்” என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது

விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் கல்லூரி சாலையில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அருகே பல முருகராஜா (45) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். பள்ளிக்கு அருகில் உள்ள கடை என்பதால், பென்சில், பேனா, சிறிய ரக நோட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மாணவிகள் இங்கே வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முருகராஜா, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அதை மாணவிகளிடம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்தைக் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளியில் சென்று முறையிட்டுள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில் பெட்டிக்கடைக்காரரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ

கேரளாவில் 3 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்பதற்காக சுங்கச்சாவடியை எம்எல்ஏ ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக பேசிய அவர், “சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் அவசரமாக ஒரு ரயிலை பிடிக்க நான் வேகமாக சென்றுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அவர்கள் 3 நிமிடம் காத்திருக்குமாறு கூறினர். தொடர்ச்சியாக பின்னால் இருந்து மற்றவர்கள் ஒலி எழுப்பியதால் உடைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close