[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் ! நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது

rajinikanth-meets-7-year-old-erode-boy

ஈரோட்டில் 50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த முகமது யாசின் என்ற சிறுவன் குடும்பத்துடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்தார்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் பாட்ஷா - அப்ரோஸ்பேகம் தம்பதியினர். இவர்களின் இளைய மகன் முகமது யாசின். சின்னசேமூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்ஷா, வீதிகளில் பனியன் உள்ளிட்ட ஆடைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.  அப்பேராஸ்பேகம், துணி தைப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற வேலைகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட ஏழ்மையான குடும்ப சூழலில் வளர்ந்தாலும், சிறுவன் முகமது யாசின் நேர்மையுடனே வளர்ந்து வருகிறார். அவரது நேர்மையைச் சோதிக்கும் விஷயம் ஒன்றும் கடந்த 11ம் தேதி அரங்கேறியது.

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த முகமது யாசின், பள்ளி அருகே 50 ஆயிரம் ரூபாயைக் கண்டெடுத்துள்ளார். அதைத் தனது ஆசிரியர்களிடம் கொடுக்க, அவர்கள் சிறுவனுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் அளித்தனர். அப்போது சிறுவனின் நேர்மையை காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டினர்.

உடுத்திக்கொள்ள அழகான சீருடை கிடையாது என்ற சூழலிலும், நேர்மையோடு செயல்பட்ட சிறுவனைப் பாராட்டி, புதிய பள்ளிச் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை காவல்துறையினர் அளித்தனர். மேலும், வரும் 19-ம் தேதி சிறுவனுக்கு பாராட்டு விழாவுக்கும் காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத சிறுவனின் நேர்மையான செயலால், அவனது பெற்றோரும் பெருமையடைந்துள்ளனர்.

சிறுவனின் கள்ளம்கபடமில்லாத செயல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைத்துறையினரும் அச்சிறுவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்ததோடு, உதவிகள் செய்யவும் முன்வந்துள்ளனர். இதனிடையே சிறுவன் தனக்கு நடிகர் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் சிறுவன் முகமது யாசின் தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார்.

நேர்மைக்கும், உண்மைக்கும் உரிய வரவேற்பைப் கொடுத்து, அதை ஊக்குவிக்கும் செயலில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருவது, பல முகமது யாசின்களைக் காண முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close