[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கடமையை கலையாக செய்யும் காவலர்; பாராட்டும் வாகன ஓட்டிகள்

traffic-police-control-the-traffic-through-a-different-dance-movement

சென்னையில் பிரதான சாலையில் நடனமாடியபடி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடையே பாராட்டுகளை பெற்றுவருகிறார்.

சென்னை மாநகராட்சி கட்டடப்பகுதி சிக்னலில் அதிவேகமாக விரையும் வாகன ஓட்டிகள் சிக்னலை கவனிக்கிறார்களோ,. இல்லையோ, இந்த போக்குவரத்து காவலர் ராஜேஷை கண்டவுடன் நின்றுவிடுகிறார்கள். காரணம் இவரது நடன அசைவுகள். 2003 இல் காவல் பணியில் சேர்ந்த ராஜேஷ், 13 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றினார். பின்னர், 2016 இல் போக்குவரத்து காவலராக பணிமாற்றம் செய்யப்பட்ட இவர், சாலையில் போக்குவரத்தை தனது ஸ்டைலில் கட்டுப்படுத்துகிறார்.

பெரியமேடு போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றும் இவர் தனக்கு 3 லட்சியங்‌கள் இருப்பதாக கூறுகிறார். ஒருமுறை சென்னை வந்த பெங்களுருவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இவரது போக்குவரத்து நடனத்தால் கவரப்பட்டு அதனை படம்பிடித்து யூட்யூபில் போட, அதற்கு கிடைத்த வரவேற்பு இன்றும் இவர் பற்றி பேச வைத்துக்கொண்டிருக்கிறது. கடமையை கடனே என்று செய்யாமல் கலைவடிவத்தில் செய்யும் இந்த போக்குவரத்து காவலர் மற்றவர்களுக்கு உதாரணமாகவே இருக்கிறார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close