[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

tn-government-appointment-officers-to-monitoring-kudimaramathu-works

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவில் 328.95 கோடி ரூபாய் செலவில் 1511 குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடிமராமத்து பணிகள் நீர் வளத்துறையால் திட்டமிடப்பட்டு விவசாயிகள் சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை கண்காணிக்க நீர் வளத்துறையின் 15 வட்டங்களுக்கு 7 அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் வெள்ளாறு வட்டங்களுக்கு ககன்தீப் சிங் பேடி, வேலூர் திட்ட வட்டம், பாலாறு படுகை வட்டம், வேலூர் குட்டை நவீனமாக்கும் வட்டம் ஆகியவற்றிற்கு பி அமுதா, பெரியாறு வைகை படுகை வட்டம், கீழ் வைகை படுகை வட்டம் ஆகியவற்றிற்கு பங்கஜ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் வைப்பார் படுகை வட்டம், தாமிரபரணி படுகை வட்டம் ஆகிய வட்டங்களை ராஜேந்திர ரத்னுவும், மேல் காவிரி படுகை வட்டம், பழனி சிறப்பு திட்ட வட்டம் அகியவற்றை ஆசிஷ் வச்சானியும் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய காவிரி வட்டம், கீழ் காவிரி வட்டம் ஆகியவற்றை தரேஸ் அகமதும், பவானி ஆற்று படுகை, பரம்பிக்குளம் ஆழியார் படுகை வட்டம் ஆகியவற்றை கே கோபால் கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகள் விவசாயிகள் சங்கங்களின் பங்கேற்பை உறுதிசெய்வார்கள் என்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைவதற்கு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரை வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அணைகட்டுகளை பார்வையிட்டு மதகுகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close