[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

தொடர்ந்து பரவிய வதந்தி... சென்னையில் நடந்த கொடூரம்..!

2-attacked-by-rumours-in-chennai

குழந்தை கடத்தல்காரர்கள் என பரவிய வதந்தியால் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதில் குட் மார்னிங், குட் நைட் போன்ற மெசேஜ்களோடு ஏகப்பட்ட பார்வேர்டு மெசேஜ்களும் அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த மெசேஜ் இப்போது தேவைதானா..? என்பதை கூட அறியாமல் பலர் தேவையற்ற காலாவதியான மெசேஜ்களையும் அப்படியே பார்வேர்டு செய்கின்றனர். அனுப்பும் குறுஞ்செய்தியின் உண்மை நிலவரத்தை அறிந்து அதனை பார்வேர்டு செய்தால் பரவாயில்லை. ஆனால் பலர் அதனை கடைபிடிப்பது இல்லை. உதாரணத்திற்கு, ஒருவர் தனக்கு B+ ரத்தம் தேவை என தொடர்பு எண்ணோடு 2015-ல் பதிவிட்ட மெசேஜை 2018-ல் பார்வேர்டு செய்கிறார்கள். நம்மால் ஒருவருக்கு உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த செயலை மேற்கொண்டிருந்தாலும் கூட அதன் உண்மை நிலவரத்தை அறிந்த பின்னரே அதனை பார்வேர்டு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் கவனிக்க மறந்து விடுகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் சென்னையில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த கோபால், வினோத் ஆகிய இரண்டு இளைஞர்கள் வழக்கமான தங்களது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கும்பல் ஒன்று, இவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்துக் கொண்டு கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளது. ஒருசிலர் தாக்க ஆரம்பித்த உடன் இவர்கள் உண்மையான குழந்தை கடத்தல்காரர்களாகத் தான் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டு மற்றவர்களும் தாக்க ஆரம்பித்துள்ளனர். அந்த இளைஞர்களுக்கு கும்பல் தங்களை ஏன் தாக்குகிறது என்றே தெரியவில்லை. இருப்பினும் தாங்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என சொல்லியும் அந்தக் கும்பல் கேட்காமல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த இரண்டு இஞைர்களும் சுய நினைவை இழந்து அபாய கட்டத்திற்கு சென்றுள்ளனர். தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இதுபோன்று பரவிய வதந்தியால் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள திநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன், தேனாம்பேட்டையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டு வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ சமுக வலைத்தளங்களில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
. சந்தேகப்படும்படியாக யாரும் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
 வதந்தி பரப்புவதை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close