[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

தமிழகத்தில் அமைகிறது சியட் டயர் தொழிற்சாலை

ceat-tyres-company-in-tamilnadu

தமிழகத்தில் சியட் டயர் தொழிற்சாலையை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தில் சியட் (CEAT) டயர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும், அதற்கு தமி‌ழக அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தொழில் மற்றும் வணிகவரித்துறை தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சியட்  டயர் தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அதன்மூலம் புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close