[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் !

bomb-blast-at-police-station

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யும்போது வெடித்ததில் காவலர்கள் 4 பேர் காயமடைந்தனர். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் இருக்கிறது செண்பகத்தோப்பு வனப்பகுதி. இங்கு காட்டுப்பன்றி, மான், யானை, கரடி அதிகளவில் உள்ளது. வறட்சி நேரங்களில் இவை அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து விளை பொருட்களை தின்று விட்டு செல்லும். இந்த மிருகங்களை பிடித்து வேட்டையாட மர்ம கும்பல் ஆங்காங்கே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மிருகங்களுக்கு மயக்க விதை வைத்தல், வெடி வைத்தல், சுருக்கு கம்பி அமைத்தல் என பல்வேறு வழிகளில் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்.

பன்றிகளுக்கு அவை விரும்பும் கிழங்கு வகைகளில் வெடி குண்டை வைத்து விடுவார்கள். கிழங்குகளை பன்றிகள் கடிக்கும் போது வாய் கிழிந்து உயிருக்கு போராடும். காலையில் அங்கு செல்லும் வேட்டை கும்பல் அதனைக் கொன்று கறி, தோல் உறித்து விற்பனை செய்கின்றனர். வன விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து தனிப் பிரிவு காவலர்கள் தொடர்ந்து செண்பகத்தோப்பு வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இதில் ஜூன் 19 ஆம் தேதி வனப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நாட்டுவெடிகுண்டுகளுடன் சுற்றிதிரிந்த சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த நல்ராஜ் என்பவரை விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து 7 நாட்டுவெடிகுண்டுகள் கைப்பற்றபட்டன. மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

இன்று மம்சாபுரம் காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டுகளை அழிக்கும் முயற்ச்சியில் வெடிபொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் ஈடுபட்ட போது திடீரென வெடித்ததில் காவலர்கள் தேவதாஸ், பவுன்ராஜ், வீரபாண்டி,ஜெயபிரகாஷ் ஆகிய 4 காவலர்கள் காயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தேவதாஸ் மதுரை கொண்டு செல்லபட்டார். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close