[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

மதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார்

revenue-minister-rb-udayakumar-thank-to-cm-palanisamy-and-deputy-cm-pannirselvam

மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தான் அமைய வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சரின் ஜெயலலிதாவின் கனவு என்று தெரிவித்தார். அத்துடன் தென்மாவட்ட மக்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றிகள் என்று அவர் கூறினார். 

முன்னதாக, நேற்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ஆர்.பி.உதயகுமார் உறுதி செய்திருந்தார். இதுதொடர்பாக புதியதலைமுறைக்குப் பேட்டி அளித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் அமைவது தொடர்பாக தமக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close