[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

முதல்வருடன் பேசி பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு பற்றி முடிவு- பன்னீர்செல்வம்

talking-with-the-chief-minister-the-tax-cut-on-petrol-and-diesel-ops

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். பெட்ரோல் டீசல், விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலைவாசி உயரும் என்றும், கேரளாவை போலவே தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

                     

இதனை அடுத்து பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவு என கூறினார். கேரளாவில் மதிப்புக் கூட்டு வரிக்கு மேல் வரி போடப்படுகிறது, ஆனால் தமிழகத்தில் அந்த நடைமுறை இல்லை என கூறினார். இருப்பினும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close