[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்” - வைரமுத்து

writer-vairamuthu-said-about-tuticorin-sterlite-protest

தூத்துக்குடி விவகாரத்தில் அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ? என வைரமுத்து கேள்வியுடன் சாடியுள்ளார்.    

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகக் மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, “பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறது காவல்துறை. அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ? தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்.” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close