[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ஊருக்குள் புகுந்து கலக்கிய குட்டி யானை 

the-atrocity-of-little-elephant-in-the-city

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாரில் வழித் தவறி வந்த குட்டியானை வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் அங்குமிங்கும் ஓடி கலக்கியது. வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பு பிரிவில் சேர்த்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் மூணாரும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட ரம்மியமான பகுதி. இங்கு வரையாடுகளுக்காக இரவிகுளம் தேசிய பூங்காவும் உள்ளது. வனங்கள் சூழந்த மூணாரில் அடிக்கடி காட்டு யானைகள் நகருக்குள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில். யானை கூட்டங்களில் இருந்து வழித் தவறிய ஐந்து மாதம் மதிக்கக்கத்தக்க குட்டியானை மூணார் நகருக்குள் வந்தது. மூணார் நகருக்கு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அங்குமிங்கும் உலவிய குட்டி யானையைக் கண்டு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் அனைத்தையும் சாலையிலேயே நிறுத்தி, குட்டியானைக்கு அச்சம் வராமல் பார்த்துக் கொண்டனர்.

பின் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேவிகுளம் வனத்துறை அதிகாரி நிபு கிரன் தலைமையில் வனத்துறையினர் நிகழ்விடம் வந்து குட்டி யானையை மீட்டு சென்றனர். தற்போது குட்டியானை வனத்துறையின் பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு நீராகாரமும், உடல்நிலை பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களில் குட்டியின் வாசம் கண்டு தாய் யானை வருவதை எதிர்நோக்குவதாகவும், இல்லையேல் வனத்திற்குள் சென்று தாயோடு இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மூணார் வனத்துறையினர் தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close