[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

அக்னி வெயிலை தணித்த கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி !

tamil-nadu-cyclonic-circulation-brings-rains

தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், பல இடங்களில பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக மா‌லை நேரங்களில் மழை‌ பெய்வதால் குளிர்காலம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்கள் நிரம்ப தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 3 மாதமாக கோடைவெயிலின் தாக்கத்தில் இருந்த பொது மக்கள் இன்று பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஐந்து நாட்களாக காலைமுதல் மேக கூட்டங்கள் கொத்துக்கொத்தாக நகரை நோக்கி படையெடுப்பதும், பிற்பகல் கடந்து, மாலை நேரத்தில் பலத்த மழையாக பொழிவதுமான தொடர் மழைக்காலநிலை நிலவுகிறது. அனுதினமும் தொடரும் இந்த மழையால், மலைப்பகுதிகளில் பூமி குளிர்ந்து, குளிர்காலம் போல காலநிலை நிலவுகிறது. தொடர் மழையால் நீர் ஆதாரம் பெருகி விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர். கோடை வசந்த காலத்தில், குளிர்க்காலம் போல கொடைக்கானல் மாறியுள்ளது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளையான்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் நடந்து வரும் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. திடீரென பெய்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்து பூமியை குளிர்வித்தது. பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

          

கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரங்களில்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை முதலே மேக மூட்டத்துடன்காணப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும்இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம்துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகரின் காந்திபுரம், அவினாசி சாலை,சிங்கநல்லலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடியகனமழை பெய்தது.இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவும்,கோவையில் பலத்த மழை பெய்து வருவதாலும் , கோடை காலம் என்ற சூழல் இல்லாதநிலையில் கோவை மாவட்டம் தற்போது உள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close