[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

நீட் தேர்வு எழுதிய மகளை அழைத்துச் செல்லும்போது உயிரிழந்த தந்தை..!

neet-student-father-died-due-to-heart-attack

பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இன்று நடைபெற்றது. பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழக மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வை எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவும் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மதுரை மாவட்டம் பசுமலையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவை அவரது தந்தை கண்ணன் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றார். தேர்வு முடித்துவிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டிற்கு ஐஸ்வர்யாவுடன் கண்ணன் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணசாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏ‌ற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close