[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

மேட்டூர் அணையை நிர்வகிக்க முயல்கிறதா மத்திய அரசு..?

central-govt-try-to-maintain-mettur-dam

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரஉள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் பஞ்சாப்பில் உள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்று ஒன்றை அமைக்க மத்திய அரசு வரைவு வழங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று மூன்றாவது வழக்காக காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மத்திய அரசின் சார்பில், பஞ்சாப்பில் உள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்று ஒன்றை அமைக்க வரைவு வழங்கலாம் என என தகவல் வெளியாகி உள்ளது.

ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப்பில் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளே பக்ரா, நங்கல் ஆகும். இதனை நிர்வகிப்பதே பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம். 1966-ம் ஆண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே பக்ரா, நங்கல் அணைகளை இயக்கும் அதிகாரமும் ஏழு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்தின் கையில் வந்தது. பக்ரா அணை ஹிமாச்சல் மாநிலத்திலும், நங்கல் அணை பஞ்சாப் மாநிலத்திலும் இருந்தாலும், அணையின் நிர்வாகம்,  திட்ட பராமரிப்பு ஆகியவற்றை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்தி வருகிறது. இப்போது பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று ஒன்றை அமைக்க மத்திய அரசு வரைவு வழங்கி அது அமைக்கப்பட்டால், காவிரி மற்றும் அதன் கிளைநதிகள், இரு மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகள் அனைத்தும் வாரியத்தின் கட்டுப்பாட்டில் செல்லும். காவிரி ஆறு தமிழகத்தின் மேட்டூர் அணை வழியாகவும் பாய்கிறது. அப்படியானால் மேட்டூர் அணையும் அந்த மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இதன்மூலம் மேட்டூர் அணையை நிர்வகிக்க மத்திய அரசு மறைமுகமாக முயல்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தற்போது மேட்டூர் அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close