[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு 

local-election-court-case-madurai-high-court-branch-new-order

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் ‘ 2016 அக்டோபர் 24 ஆம் தேதி முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக இன்று வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஜூலை மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபரில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலர் ராஜசேகர் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் " நீதிமன்ற உத்தரவுப்படி 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மறுவரையறை குழு ஏற்படுத்தபட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திருத்தி அமைக்கப்பட்ட வார்டுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் புகார்கள் பெறபட்டு அந்த குழு ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் இருந்து 8009 புகார் மனுக்களும், நகர் பகுதிகளில் இருந்து 10952 புகார் மனுக்கள் என மொத்தமாக 18961 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 12 மாநகராட்சிகளில் 912 வார்டுகளும், 124 நகராட்சிகளில் 3213 வார்டுகளும்,578 பேரூராட்சிகளில் 8288 வார்டுகளும் மறுவரையறை செய்யப்படவுள்ளது. இதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் மறுவரையறை தொடர்பாக பெறப்பட்டுள்ள மனுக்களை ஆய்வு செய்து வார்டு மறுவரையறை இறுதி பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதன்பின் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும். வார்டு மறுவரையறை தொடர்பாக குழு அமைத்து பணிகள் நடந்து வரும் வேலையில் உள்ளாட்சி தேர்தலை 15 தினங்களுக்குள் நடத்த வேண்டும் என கோருவது இயலாத காரியம், எனவே மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது " .

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close