[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

‘உடலை மட்டுமே பார்ப்பது காதலல்ல’: விபத்தில் கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த காதலி..!

true-love-in-vellore

விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை வீட்டின் எதிர்ப்பையும் மீறி பெண் ஒருவர் கரம்பிடித்த சம்பவம் வேலூர் அருகே நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். ஊட்டி மசினகுடி பகுதியை சேர்ந்தவர் ஷில்பா. இருவரும் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்துள்ளனர். இந்நிலையில் படிப்பை முடித்த விஜய் வேலை தேடி பெங்களூருக்காக செல்லும் வழியில் இரயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் விஜய் தனது இரண்டு கால்களையும் இழந்தார்.

இதனையடுத்து விஜயை திருமணம் செய்துகொள்ள ஷில்பாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்த விஜய்யை திருமணம் செய்து கொண்டார் ஷில்பா. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் விஜய் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது காதலில் உறுதியாக இருந்த ஷில்பாவை அனைவரும் பாராட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close