[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ட்ராக்டர் பறிமுதல்: தீக்குளிக்க முயன்ற விவசாயி !

farmer-to-set-ablaze-himself-for-recovering-his-tractor-on-default-of-private-loan-repayment

தவணைத் தொகை கட்டாததால் டிராக்டரை தனியார் நிறுவனம் பறிமுதல் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகில் உள்ள கோவிந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாயியான இவர் நெல்லையில் உள்ள தனியார் டீலரிடம் பைனான்ஸ் முறையில் வாங்கிய டிராக்டரை தவணைத் தொகை செலுத்தவில்லை எனக் காரணம் கூறி, டிராக்டரை கடந்த வெள்ளிக்கிழமை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள நிலையில், இன்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். புகார் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த கனகராஜ், பைக்குள் வைத்திருந்த 5 லிட்டர் மண்ணென்ணெய் கேனை எடுத்து தன் தலைவழியாக உடல் முழுவதும் மண்ணென்ணெய்யை ஊற்றிவிட்டு, தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றார். அதற்குள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

பின்னர் தீக்குளிக்க முயன்ற விவசாயி  கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் " நெல்லையைச் சேர்ந்த தனியார் டீலரிடம் பைனான்ஸ் முறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை வாங்கினேன். இதற்காக முன்பணமாக ரூ 3 லட்சம் கட்டிவிட்டேன். ஆனால் இதற்கான அத்தாட்சியாக ரசீது உள்ளிட்ட எந்த ஆவணமும் எனக்குத் தரப்படவில்லை. லோன் தொகையைப் பற்றியும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மாதத்தவணையாக ரூ.45 ஆயிரம் கட்டும்படி சொன்னார்கள். கடந்த மாதம் வரை தவணைத்தொகையை முறையாக சரியான தேதியில் கட்டி வந்துள்ளேன். இன்னும் ஒரே ஒரு தவணை மட்டுமே கட்டப்படாமல் பாக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பைனான்ஸ் கம்பெனியினர் என்னிடம் எந்தத் தகவலும் சொல்லாமல், எனக்கு தெரியாமல் என்னுடைய டிராக்டர் மற்றும் சுழல் கலப்பையையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், எனக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மனமுடைந்துள்ளேன். தனியார் பைனான்ஸ் கம்பெனி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் தீக்குளிக்க முயற்சி செய்தேன்." என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close