[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சசிகலா கணவர் நடராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி

heart-attack-to-sasikala-husband-natarajan

சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, நாள்தோறும் அப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்டார். பின்னர் சிசிக்சை முடிந்து நடராஜன் நலமுடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நடராஜனுக்கு திடீரென இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close