[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்

aththikadavu-avinashi-project-will-be-implemented-soon

அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்பாசனத் திட்டத்தை 1,789 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சக பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் நீர்வள ஆதாரத்துறைக்கு 5,127 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றினை நம்பியாற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு 100 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குடிமராமத்துத் திட்டங்களுக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.166 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 250 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஆதாரமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. பவானி ஆற்றிலிருந்து உபரி ஆகும் நீரை கோவை மாவட்டம் அத்திக்கடவிலிருந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை வரை கொண்டு செல்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள 72 குளங்கள், 538 குட்டைகளுக்கு கொண்டு வந்து நிலத்தடி நீர் மட்டத்தை செரிவூட்டும் நோக்கத்தோடு இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close