[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

continuous-fire-on-3rd-day-in-erode

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கம்பத்ராயன் கிரி மலையில் 3-வது நாளாக காட்டுத் தீ தொடர்ந்து வருகிறது. வறட்சியின் காரணமாக வனத்தில் பெரும்பாலான பகுதி காய்ந்து சருகாகியுள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. வேகமாக பரவி வரும் தீயால் மூலிகை மற்றும் விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி வருகின்றன.

தீ மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு வேட்டைத்தடுப்பு காவலர்கள் சுமார் 50 பேர் வனத்தில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக தமிழக எல்லையான கேர்மாளம் வனப்பகுதியிலும் தீ பரவியுள்ளது. இந்‌நிலையில், 300 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் பத்மா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் கருகிய சோகம் இன்னும் யார் மனதையும் விட்டு நீங்கவில்லை. இந்த வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமே தீ எரிவதாகவும், ஆனால் அதனை அணைக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாலேயே 10 உயிர்கள் பறிபோகியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே மூன்றாவது நாளாக தீ எரிந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close