[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கருணை இல்ல மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு

need-cbi-enquiry-on-mercy-home-mysteries-petition-in-chennai-hc

பாலேஸ்வரம் கருணை இல்ல மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்யாண ராமன் என்பவர் இந்தப் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும், இதுவரை 1590 பேர் இறந்துள்ளதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் உடல் பாகங்கள் விவசாய நிலங்களில் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள கல்யாண ராமன், கருணை இல்லத்தில் இருப்பவர்கள் இறந்துவிட்டால் அந்த விவரம் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார். எனவே பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெளிப்படையான அமைப்பு விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலவரம் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்‌டு எ‌ழுந்தது. இதையடுத்து கருணை இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த 300-க்கும் அதிகமான முதியவர்களை அரசுக் காப்பகங்களுக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close